பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. படைமாட்சி

(படையினுடைய சிறப்பும் நன்மையும்)

1. உறுப்பு:அமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை. 761

(ப-ரை) உறுப்பு அமைந்து - படைக்குரிய உறுப்புக் களால் நிறைந்திருந்து, ஊறு - போரில் உண்டாகும் து ைபங் களுக்கு, அஞ்சா - அஞ்சாமல் நிலைத்து நின்று, வெல் படை - வெல்வதாகிய படை, வேந்தன் - வேந்தனுடைய, வெறுக்கையுள் . செல்வங்களுள், எல்லாம் . எல்லாவற்றி லும், தலை - தலையான (முதன்மையான) செல்வமாகும்.

(க-ரை) படைக்குரிய உறுப்புக்களால் அமைந்து போரினிடத்து ஊறுபடுவதற்கு அஞ்சாமல் நின்று பகை யினை வெல்வதாகிய படை, வேந்தனுடைய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையான செல்வமாகும்.

2. உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக்கு அல்லால் அரிது. 702

(ப-ரை தொலைவிடத்து . தான் சிறிதாகியபோது, உலைவிடத்து - தனக்கு அழிவு வந்து விட்டால், ஊறு அஞ்சா - உண்டான துன்பத்திற்கு அஞ்சாமல் நின்று போரிடுகின்ற, வன்கண் - திண்மையும் உறுதியும், தொல் படைக்கு - அவன் முன்னோரைத் தாங்கிவரும் படை க்கு, அல்லால் - அல்லாமல், அரிது - மற்றவற்றிற்கு உண்டாகாது.

(கரை) தான் சிறிதாக இருந்த இடத்தும் போரில் அழிவு வந்தால் அஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை இவனுடைய முன்னோரைத் தாங்கிவரும் படைக்கு (தொன்றுதொட்டு வருவது) அல்லாமல் உளதாகாது. .