பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323

3. ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும். 763

(ப-ரை) எலி - எலிகளாகிய, பகை - பகை மிகுந்து, உவரி - கடல் போன்று, ஒலித்தக்கால் - ஒலித்து ஒசையிட் டால், என்னாம் - நாகத்திற்கு என்ன துன்பம் உண்டாகும், நாகம் - அந்த நாகப்பாம்பு, உயிர்ப்பது - மூச்சு விட்ட வுடனே, கெடும் . அவை கெட்டழியும்.

(க-ரை) எலியாகிய படை திரண்டு கடல்போல ஒலித் தாலும், நாகத்திற்கு என்ன துன்பத்தினைச் செய்ய முடியும்? அந்த நாகம் மூச்சு விட்டவுடனே அந்த எலிப்பகை கெட்டுவிடும்.

4. அழிவின்றி அறை போகாது ஆகிவழிவந்த

வன்கண் அதுவே படை, 764

(ப-ரை அழிவு - போரில் கெடுதல், இன்றி - இல்லா மல், அறை போகாது - பகைவரால் கீழறுக்கப்படாத தாய், ஆகி ஆகியிருந்து,வழி . தொன்றுதொட்டுப் பழமையாய், வந்த - வந்த, வன்கணதுவே - வன்கண்மையாகிய வலிமை யுடையதே, படை - சிறந்த படையாகும்.

(க-ரை) போரில் கெடுதல் இல்லாமல், பகைவரால் கீழறுக்கப்படாததாகித் தொன்றுதொட்டு வந்த வலிமை யினையுடையதே அரசனுக்குப் படையாவதாகும்.

5. கூற்று உடன்று மேல்வரினும் கூடிஎதிர் கிற்கும்

ஆற்ற லதுவே படை. 765

(ப-ரை) கூற்று. கூற்று வன், உடன்று . சினங்கொண்டு, மேல்வரினும் . தாக்குவதற்கு த் தன்மேல் வந்தாலும், கூடி - நெஞ்சு ஒத் து, எதிர் நிற்கு எதிர்த்து நிற்கின்ற, ஆற்றல துவே - வலி மையினை புடைய துவே, ப ை. . படையாகும்.