பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329

|க-ரை! கூற்றுவனே கோபித்து எதிர்த்து வந்தாலும் நெஞ்சத் துணிவுடன் எதிர்த்து நின்று தாங்கும் ஆற்றலை உடையதே படையாகும்.

6. மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனங்ான்கே ஏமம் படைக்கு, T66

(ப-ரை) மறம் - வீரமும் தறுகண்மையும், மானம் - மானம் உடைமையும், மாண்ட - சிறப்பமைந்த, வழிச் செலவு - முன்பு வீரராயினார் சென்ற வழியில் செல்லுத லும், தேற்றம் தலைவனுடைய நம்பிக்கைக்குட்பட்டதும், என - என்று கூறப்பட்ட, நான்கே - இந்த நான்கு குணங் களுமே, படைக்கு ஏமம் - படைக்குப் பாதுகாவல்களாகும்.

(கரை) வீரமும் மானமும் மாட்சிமைப்பட்ட வீரர் வழியில் செல்லலும் நம்பிக்கையுள்ளதும் ஆகிய நான்கு குணங்களுமே சேனைக்குப் பாதுகாப்பாகும்.

7. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து. 767 (ப-ரை) தலைவந்த - பகைவரால் தன்னை எதிர்த்து வந்த, போர் . போரினை, தாங்கும் . நீக்கி விலக்குகின்ற, தன்மை - வகைமுறையினை, அறிந்து- வகுத்துக்கொண்டு, 'தார் - அவரது படைத் தாக்குதலை, தாங்கி - தன்மேல் தடுத்துக் கொண்டு, செல்வது தானை - தான் அப்பகைவர்

மீது செல்வதே படையாகும்.

(க-ரை பகைவரால் தன்மேல் வந்த போரின் விலக்குகிற வழிமுறையினை அறிந்து வகுத்துக்கொண்டு தான் அப்படையின் மேல் செல்வதே படையாகும்.

8. அடல்தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும். 768 (ப-ரை தானை - சேனையானது, அடல்தகையும் - போரி செய்கின்ற சிறந்த வீரமும், ஆற்றலும் . பகை தன்