பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

மேல் வந்தால் தாங்கும் வலிமையும், இல் - பெற்றில்லை, எனினும் - என்றாலும், படைத்தகையால்.தனது தோற்றப். பொலிவாலே, பாடுபெறும் . பெருமையினை எய்தும்.

(கடரை) சேனைக்குப் பகைவரைக் கொல்லும் தன்மை பும், சிறந்த வீரமும் இல்லையென்றாலும், தனதுதோற்றப். பொலிவாலே பெருமையினை அடையும்.

9. சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை. 769,

(ப-ரை) சிறுமையும் - குறைந்துசிறிதாவதும்,செல்லாநீங்காத, துணியும் . வெறுப்புணர்ச்சியும், வறுமையும் . வறுமையும், இல்லாயின் இல்லாதிருந்தால், i.Joi...— . வெல்லும் . சேனையானது பகைவரை வென்று விடும்.

|கடரை) குறைந்து சிறிதாகிக்கொண்டு போவதும், வெறுப்புணர்ச்சியும் வறுமையும் ஆகியவை இல்லாமலிருந். தால் அச்சேனையானது பகைவரை வெல்லும்.

10. கிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல், 770.

|ப-ரை) நிலைமக்கள் - போரில் நிலைத்து நின்று. போரிடும் வீரர்களை, சால . மிகுதியாக, உடைத்து - உடையதே, எனினும் - என்றாலும், தலைமக்கள் . தலைவர்களாகிய வீரர்கள், இல் வழி . இல்லாவிட்டால், தானை இல் . சேனை நிற்காது.

(க-ரை போரில் நிலைத்து நிற்கும் வீரர் பலரை மிகுதியாகப் பெற்றிருந்தாலும் தனக்குத் தலைவர்களான தலைமை வீரர்கள் இல்லாதபோது சேனை நிற்காது.