பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

அனும் - அது வேண்டாமென்று சினந்தாலும், சீர் . அவ்விர மிகுதியில், குன்றல் இலர் - குறைதல் என்பது இல்லாதவர் ஆவார்.

(கரை) போர் வந்தால் தமது உயிர்ப்பொருட்டு

அஞ்சாமல் போர்மேல் செல்லும் வீரர், தமது தலைவ

னாகிய இறைவன் (மன்னன்) அது வேண்டாம் என்று கோபித்தாலும் அவ்வீர மிகுதியில் குன்றமாட்டார்கள்.

9. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர். 779 |ப-ரை) இழைத்தது - தாம் கூறிய வஞ்சினம், இக வாமை - தப்பாமல் இருக்க வேண்டி, சாவாரை -போருக்குச் சென்று இறக்க வல்ல வீரரை, பிழைத்தது - அது தப்பிய வாறு சொல்லி, ஒறுக்கிற்பவர் யார் - ஏளனமாகப் பேசுபவர் யாவர்?

|க-ரை தாம் கூறிய வஞ்சினம் தப்பாமற் பொருட்டுப் போரிற் சென்று சாவவல்ல வீரரை அது தப்பியவாறு :சொல்வி இகழ்ந்து பேசுவதற்குரியார் யார்?

10. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து, 780

(ப. ரை) புரந்தார் - தம்மை ஆட்சி, செய்த அரசனது, கண் . கண்களில், நீர் நீர், மல்க . பெருகுமாறு, சாகிம் பின் - போரிலே சாக முடிந்தால், சாக்காடு . அத்தகைய சாக்காடு (இறப்பு) இரந்து யாசித்தேனும், கோள் . கொள்ள, தக்கது . தகுதியினை, உடைத்து - உடைய தாகும்.

(க-ரை) தமக்குச் செய்த நன்றிகளை நினைத்து ஆளும் அரசர் கண்களில் நீர் பெருகும் வகையில் போரில் .சாகப் பெற்றால் அச்சாக்காடு இரத்தாயினும் (யாசித் தேனும்) பெற்றுக்கொள்ளும் தகுதியினை உடையதாகும்.