பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. நட்பு

(நண்பர்களைப் பற்றிய விளக்கமும் சிறப்பும், பயனும்)

1. செயற்குஅரிய யாவுள கட்பின் அதுபோல் -

வினைக்குஅரிய யாவுள காப்பு. 781

(ப.ரை) நட்பின்-நட்பு செய் தலைப் போல, செயற்குஒருவன் தனக்குச் செய்து கொள்ளுவதற்கு, அரிய - அருமை :யான செயல், யாஉள - எவை உண்டு, அதுபோல் . அதனைப்போல, வினைக்கு (பகைவர்) செய்யும் தொழி லுக்கு, அரிய காப்பு - அருமையான பாதுகாவலானவை, .யா உள -எவை உண்டு?

(க-ரை) நட்பினைப்போல செய்து கொள்ளுவதற்கு அரிய பொருள்கள் யாவை உள? எவையும் இல்லை? அந் நட்பினைச் செய்து கொண்டால் அதுபோலப் பகைவர் செய்யும் தொழிலுக்கு அரிய பாதுகாப்பாவன யாவை உள? வேறு எவையும் இல்லை என்பதாம்.

2. கிறைநீர் நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்நீர பேதையார் நட்பு. 782

(ப-ரை) நீரவர் - அறிவுடையார்களுடன் செய்து கொள்ளும், கேண்மை . நட்புக்களானவை, பிறை - பிறை யைப்போல, நிறை - அன்றாடம் நிறைகின்ற, நீர . தன்மையினவாம், பேதையார் . அறிவில்லாதவரது, நட்பு. நட்புக்கள், மதி - நிறைந்த சந்திரனானவன், பின். பின்னே |நாள்தோறும் குறையும்) நீர - தன்மையுடையதாகும்.

[க-ாை) அறிவுடையாருடன் கொள்ளும் நட்பு நான்

தோறும் பிறை மதியினைப்போல நிறையும் தன்மையுடைய

தாகும். பேதைமையுடையார் நட்பு நிறைந்த மதி குறையும் தன்மைபோல நாள்தோறும் குறைந்து வருவதாகும்.