பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

3. கவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புஉடை யாளர் தொடர்பு. 783, (ப-ரை பண்பு - நற்குணம், உடையாளர் உடைய, மேன் மக்கள், தொடர்பு - தமக்குள் செய்த நட்பானது, பயில்தொறும் - பழகும் போதெல்லாம் (இன்பம் தரும் அது; நூல் நூற்பொருளினை, நவில்தொறும் . கற்கும். போதெல்லாம், நயம் போலும் - கற்பவர்களுக்கு இன்பம். செய்தலைப் போன்றிருக்கும்.

(க-ரை) நற்குணமுடைய மக்கள் தமக்குள் செய்த, நட்பு பழுகுந்தோறும் அவர்க்கு இன்பம் செய்வதாவது நூற்பொருள்களைக் கற்குந்தோறும் இந்நூலானது. கற்றார்க்கு இன்பம் செய்தலை ஒக்கும் என்பதாம்.

4. ககுதற் பொருட்டன்று கட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு. 784,

(ப-ரை) நட்டல் . ஒருவரோடொருவர் நட்புச் செய்து கொள்ளுதல், நகுதற் பொருட்டன்று - நகைத்துப் பழகு. வதற்காக அல்ல, மிகுதிக்கண் . நண்பனிடம் வேண்டாத செய்கை உண்டானபோது, மேற்சென்று - முற்பட்டு, இடித்தற் பொருட்டு . கண்டித்துப் புத்திமதி சொல்லு: வதற்கேயாகும்.

|க-ரை) ஒருவரோடு ஒருவர் நட்புச் செய்து கொள்ளு தல் தம்முள் நகைத்துப் பழுகுவதற்காக அல்ல:நண்பனிடம் வேண்டாத செய்கை உண்டாகும்போது முற்பட்டுக். கண்டித்து அவர்க்குப் புத்திமதி சொல்லுதற்கேயாகும்.

5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

கட்பாம் கிழமை தரும். 785, (ப-ரை புணர்ச்சி - ஒரு தேசத்தில் இருந்தாலும், பழகுதல் - அடிக்கடி பார்த்தலும் கண்டு பழகுதலும், வேண்டா - வேண்டுவதில்லையாகும், உணர்ச்சிதான் -