பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337

இருவருக்கும் உண்டான ஒத்த மனவுணர்ச்சியே, நட்பாம்நட்பு என்னும், கிழமை தரும் - உரிமையினைத் தருவ தாகும்.

(க-ரை) ஒருவனோடு ஒருவன் நட்பாவதற்கு ஒரே இடத்தில் இருப்பதும் பழுகுதலுமாகிய காரணங்கள் வேண்டியதில்லை. ஒத்த மனவுணர்ச்சியே நட்பு என்கின்ற உரிமையைக் கொடுப்பதாகும். - -

6. முகம்நக நட்பது நட்பு அன்று கெஞ்சத்து

அகம்நக நட்பது நட்பு. 786

(ப-ரை) முகம் - முகத்தினால் மட்டும், நக - மலர்ச்சி யினைச் செய்து, நட்பது நண்பனாக இருப்பது, நட்பு - நட்பு, அன்று - ஆகாது, நெஞ்சத்து - அன்பினால், அகம் - உள்ளம், நக - மகிழ்ச்சியால் மலர, நட்பது நட்பு - நட்புச் செய்வதே நட்பாகும்.

(கரை) கண்டபொழுது மனத்தால் அல்லாமல் முகத் தினாலே மட்டும் மலர்ந்து நட்புச் செய்வது நட்பு ஆகாது. அன்பினால் மனமும் மலர நட்புச் செய்வதே நட்பு என்பதாகும்.

7. அழிவி னவைநீக்கி ஆறு உய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு. 787

(ப-ரை அழிவின் அவை - கேட்டினைத் தருகின்ற தீய வழிகளிலிருந்து நீக்கி - நண்பனை நீக்கி, ஆறு - மற்ற நன்னெறியிலே, உய்த்து . செலுத்தி, அழிவின்கண் . கெடுதி வந்துற்ற போது, அல்லல் - துன் பத்தினை, உழப்பதாம் . தானும் உடனிருந்து அனுபவிப்பதே, நட்பு - நட்பாகும்.

(கரை) கெடுதியினைத் தரும் தீய வழிகளில் செல்லும் போது நண்பனை அவ்வாறு செல்லாமல் விலக்கி நல்லவழி களில் செலுத்துவதும் கெடுதல் வந்தபோது தானும் உடனிருந்து அனுபவிப்பதுமே சிறந்த நட்பாகும். -

தி. தெ.-22