பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு. 788

(ப-ரை) உடுக்கை - உடை, இழந்தவன் - குலைந்த ஒருவனுக்கு, கைபோல - உடனே கைசென்று உதவுதல் போல, ஆங்கே - நண்பனுக்குத் தன்பம் வந்த அப்போதே, இடுக்கண் - அத் துன்பத்திணை, களைவதாம் நீக்கி விடுவது தான், நட்பு நட்பாகும்.

(க-ரை) ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி செய்து இழிவினை நீக்குவதுபோல தண்பனுக்குத் துன்பம் வந்தபோது அப்பொழுது சென்று உதவிசெய்து அதனை நீக்குவதே நட்பாகும். 4

9. கட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்புஇன்றி ஒல்லும்வாய் ஊன்றும் கிலை. 789 (ப-ரை நட்பிற்கு - நட்பு என்பதற்கு, வீற்றிருக்கை இருக்கும் இடம் என்பது, யாது - எது, எனின் - என்றால், கொட்பு - திரிதல் (மாறுதல்) இன்றி - இல்லாமல், எப்போதும்) ஒல்லும் - முடியும், வாய் இடங்களில் எல்லாம், ஊன்றும் - தளர்ச்சியின்றி உதவும், நிலை . மனவலிமையாகும்.

|க-ரை நட்பானது சிறப்பாக வீற்றிருக்கும் இடம் எதுவென்றால் அது எப்போதும் மாறுபாடு இல்லாமல் முடிந்த இடங்களில் எல்லாம் தளராமையினைத் தாங்கும் திண்மையாகும்.

10. இனையர் இவர் எமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு. 790

(ப-ரை) இவர் . இந்த நண்பர், எமக்கு - எனக்கு. இனையர் - இப்படிப்பட்ட நண்பர், யாம் . யாம், இன்னம் , இத்தகைய அன்புடையோம், என்று - என்பதாக் கூறி, புனையினும்.ஒருவரை யொருவர் சிறப்பித்துப் பேசினாலும்