பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

(கரை) ஒருவனுக்கு ஊதியம் என்பது யாதென்றால். அறிவில்லாதவருடன் கொண்ட நட்பினை ஒழித்து நீங்கி, விடுவதாகும்.

8. உள் ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்பு. 798. (ப-ரை) உள்ளம் - தனது ஊக்கமானது, சிறுகுவ . கருங்கி விடுவதற்கான செயல்களை, உள்ளற்க - மனத்தில் செய்ய நினையாதிருப்பானாக, அல்லற்கண் - தனக்கு ஒரு துன்பம் வந்த காலத்தில் ஆற்றறுப்பார், நட்பு - கைவிட்டு, விடுபவரது நட்பினை, கொள்ளற்க - கொள்ளாதிருப்பா 囊歡教T在高。

(க-ரை) தன்னுடைய ஊக்கம் சுருங்குவதற்குக் காரண மான செயல்களைச் செய்ய நினை யாதிருத்தல் வேண்டும்.

அதுபோல, தனக்கு ஒரு துன்பம் வந்தபோது கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதிருத்தல் வேண்டும்.

9 . கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும். 799

|பரை கெடுங்காலை - ஒருவன் கெடுகின்ற காலத் தில், கைவிடுவார் கேண்மை . அவனைவிட்டு நீங்கிவிடுபவர் நட்பினை, அடுங்காலை - கூற்றுவன் உயிர் கொள்ளும் காலத்தில், உள்ளினும் - நினைத்தாலும், உள்ளம் சுடும் , மனத்தினைச் சுட்டுவிடும்.

கரை! ஒருவன் கெட்டுப் போகும் காலத்தில் அவனை விட்டு நீங்குபவர்களிடம் செய்துகொண்ட நட்பினை தன்னிடம் கூற்றுவன் வருகின்ற காலத்தில் நினைத்தாலும் அந்த நினைப்பு உள்ளத்தினைச் சுடும்.

10. மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800s

(ப-ரை) மாசு - குற்றம், அற்றார் - இல்லாதவாது, கேண்மை - நட்பினையே, மருவுக - தழுவிக் கொள்ளுவா