பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343

னாக, ஒப்பு . உலகத்தோடு ஒத்து வாழ்தல், இலார் . இல்லாதவர்களுடைய, நட்பு - நட்பினை, ஒன்று ஈத்தும் அவன் வேண்டிய ஒன்றினைக் கொடுத்தாகிலும், ஒருவுக - விட்டுவிடுவாயாக.

(க-ரை உலகத்தோடு ஒத்து வாழ்கின்ற குற்றமில்லா தவர்களுடைய நட்பினையே செய்தல் வேண்டும். உலகத் தோடு பொருந்துதல் இல்லாதவரது நட்பினை அவர் வேண்டிய தொன்றனைக் கொடுத்தாயினும் விட்டு விலகுதல் வேண்டும்.

81. பழைமை

1. பழைமை எனப்படுவது யாது.எனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 801

(ப-ரை) பழைமை - பழைமை, எனப்படுவது - என்று சொல்லப்படுவது, யாது - எது, எனின் - என்று வின வின், கிழமையை - பழைய நண்பர்கள் உரிமையால் செய்தவை களை, யாதும் . சிறிதளவுகூட, கீழ்ந்திடா - விலக்காமல் ஏற்றுக் கொள்ளும், நட்பு - நட்பாகும்.

(கரை) பழைமை என்று சொல்லப்படுவது யாது என்றால் பழைய நண்பர்கள் உரிமையால் செய்தவை களைச் சிறிதேனும் நீக்காமல் அப்படியே உடன்படும் நட்பாகும்.

2. நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்று.அதற்கு

உப்பாதல் சான்றோர் கடன். 8

(பரை நட்பிற்கு - நட்பினுக்கு உறுப்பு - உறுப் பானவை எவையென்றால், கெழு தகைமை - நண்பர்கள் உரிமையால் செய்வனவாகும், அதற்கு . அந்த உரிமைக்கு