பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

உப்பாதல் - உடன்பட்டு இனியவராதல், சான்றோர் கடன். நிறை குணம் செறிந்த பெரியோர்களுக்கு முறையான கடமையாகும்.

(கரை) நட்பினுக்கு உறுப்புக்களானவை யாவை என்றால் நண்பர்கள் உரிமையால் செய்வனவேயாகும். அந்த உரிமைக்கு உடன்பட்டு இனியவராதல் பெரியோர் களுக்கு முறையான கடமையாகும்.

3. பழகிய கட்பு எவன்செய்யும் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை. 803

(ப-ரை) கெழுதகைமை - நண்பர்கள் உரிமை கொண்டு செய்தவைகளுக்கு, செய்தாங்கு - தாமே செய்தாற்போல, அமையாக்கடை - உடன்பட்டு இராவிட்டால், பழகிய நட்பு - பழையதாய் வந்த நட்பு, எவன் செய்யும் - என்ன பயனைச் செய்யும்.

(க-ரை) நட்பினர் உரிமையால் செய்தவைகளைத் தாமே செய்ததுபோல உடன்படாராயின் பழமையால் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்?

4. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாள் கேளாது நட்டார் செயின் . - 804

(ப-ரை) நட்டார் - நண்பர்கள், கெழு த ைகயான் பழகிய உரிமையால், கேளாது செயின் . தம்மைக் கேளாம லேயே தமது செயலினைச் செய்து விடுவாரானால், விழை. அச்செயல் விரும்பப்படும், தகை யான் . தன்மையுடைய தாதலால், வேண்டியிருப்பர் அறிவுடைய நண்பர்கள் அதற்கு உடன்பட்டு விரும்பி இருப்பார்கள்

(க-ரை) நண்பர்கள் பழகிய உரிமையால் தம்மைக் கேளாமலேயே தமது காரியத்தைச் செய்வாராயின் அச் செயல் விரும்பப்படும் தன்மையுடையதாதலால் நண்பர்கள் அதற்கு உடன்பட்டு விரும்பி இருப்பார்கள்.