பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345

5. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க

நோதக்க நட்டார் செயின். 805

(ப-ரை) நோதக்க நாம் வருந்தக் கூடியவைகளை, நட்டார் செயின் - நண்பர்கள் செய்தால் அதற்குக் காரணம்) பேதைமை யொன்றோ ஒன்று அறியாமை எயினால் இருத்தல் வேண்டும், அல்லது பெருங்கிழமை - மிகுந்த உரிமையாய் வேண்டும், என்று உணர்க . என்பதாக

அறிந்து கொள்ள வேண்டும்.

|க-ரை நண்பர்கள் நாம் வெறுக்கத்தக்கனவற்றைச் செய்வாரானால் அதற்குக் காரணம் ஒன்று அறியாமையாக இருக்க வேண்டும்; அல்லது மிகுதியான உரிமையினால் இருத்தல் வேண்டும்.

6. எல்லைக்கண் கின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் கின்றார் தொடர்பு. 806.

(ப-ரை) எல்லைக்கண் - நட்பு என்பதன் வரம்புக்குள். நின்றார் . நின்றவர்கள், தொல்லைக்கண் - தம்முடன் பழைமையில், நின்றார். மாறாமல் நின்றவரது, தொடர்பு. நட்பினை, தொலைவிடத்தும் அவரால் கேடு வந்த காலத்திலும், துறவார் - விடமாட்டார்கள்.

(கரை) நட்பு ஆகிய வரம்பினைத் தாண்டாமல் அதன் கண்ணே நின்றவர்கள், தம்முடன் பழைமையான தன்மையில் மாறாமல் வந்தவரது நட்பினை அவரால் கெடுதிவந்த போதும் விடமாட்டார்கள்.

7. அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர். 867

(ப-ரை) அன்பின் - அன்பு கொண்டு, வழி - பழைமை யாய், வந்த வந்த, கேண்மையவர் - நட்பினைக் கொண்ட வர்கள், அழிவந்த - நட்பு செய்தவர் அழிவுக்குக் காரண மானவைகளை, செய்யினும் - தமக்குச் செய்தாரேயானா