பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

தும், அன்பு - அவரிடம் கொண்ட அன்பிலிருந்து, அறார் . நீங்கமாட்டார்கள்.

(க-ரை) பழைமையாய் வந்த நட்பினை உடையவர். கள் தமக்கு அழிவு வருவனவற்றை நண்பர்கள் செய்தாலும் அவர்களிடம் கொண்டுள்ள அன்பிலிருந்து நீங்க. மாட்டார்கள்,

8. கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள் இழுக்கம் கட்டார் செயின். 808.

ப-ரை) கேள் - நண்பர்கள் செய்த, இழுக்கம் - குற்றத். தினை, கேளா தாமேயன்றிப் பிறர் சொன்னாலும் கேளாத, கெழுதகைமை - உரிமையினை, வல்லார்க்கு . அறிய வல்லவரான நண்பர்களுக்கு, நட்டார் . அந்த நண்பர்கள், இழுக்கம் செயின் குற்றத்தினைச் செய்வாரா னால், நாள் - அந்த நாள் பயன்பட்ட நாளாகக் கருதப். படும்.
க-ரை) நண்பர்கள் செய்த பிழையினைத் தாமே. பல்லாமல் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமையறிய வல்லவர்களுக்கு அந்த நண்பர்கள் பிழைசெய்த நாள் பயன் பட்ட நாளாகும்.

9. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு. 80இ.

(ப-ரை கெடாஅ - உரிமையானது கெட்டு விடாமல், வழி - பழையதாய், வந்த - வந்ததான, கேண்மையார் . நட்புள்ளவரது, கேண்மை - நட்பினை, விடா அர் - குற்றம் கருதி விடாதவரை, உலகு விழையும் . உலகமானது. தட்பினைக் கருதி விரும்புவதாகும். .

(கரை) உரிமை அற்றுப்போகாமல் பழையதாய் வந்த, தட்புடையவரது, நட்பினை அவர் பிழை நோக்கியும் விடா

திருப்பவர்களை உலகம் அந்த நட்புக் குறித்து விரும்பும்.