பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

விடுகின்ற, ஒப்பிலார் . பழகுவதற்குப் பொருத்தமில்லாத

வருடைய, கேண்மை - நட்பினை, பெறினும் இழப்பினும் .

பெற்றாலும் அல்லது இழந்தாலும், என் - என்ன பயன்?

|க-ரை) தமக்குப் பயன் உள்ளவரைக்கும் நட்பினைச்

செய்து பயனில்லாதபோது நீங்கிவிடும் தீயவர்களின் நட்பினைப் பெற்றிருந்தால்தான் என்ன பயன்? இழந்தால் தான் என்ன பயன்?

3. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர். 813 (ப-ரை) உறுவது நட்பினைக் கருதாமல் வருகின்ற

பயனை, சீர்தூக்கும் - அளவு கண்டு பார்க்கும், நட்பும் . நட்பினரும், பெறுவது . பெறுகின்ற பொருளை, கொள் வாரும் . கருதுகின்ற பொது மகளிரும், கள்வரும் - பிறர் கேட்டினைக் கருதாத கள்வர்களும், நேர் . ஒரே தன்மை

யினராவார்கள்.

(க-ரை) நட்பினைக் கருதாமல் நட்பினால் வரும்

பயனைக் கருதுவோரும், கொடுப்பாரைக் கருதாமல் பணத்தின் அளவைக் காணும் பொது மகளிரும், பிறரி

கேடு நோக்காமல் அவரது சோர்வினைப் பார்க்கும்

கள்வரும் ஒரே தன்மையராவர்.

4. அமரகத்து ஆற்று அறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை. 814 (ப-ரை அமரகத்து - போர் வந்தபோது போர்க்களத் தில், ஆற்று அறுக்கும் - வீழ்த்தி விட்டுப் போகும், கல்லாத. கல்வியில்லாத குதிரை, அன்னார் - போன்றவர்கள் தமரின் உற்றார் போன்றிருக்கும் நட்பின் தன்மையினை

விட, தனிமை தலை - தனிமையாக இருப்பதே பெருமை :புடையதாகும்.

|க-ரை முன்பெல்லாம் தாங்கிக் கொண்டிருந்து

போர்க்களத்தில் வீழ்த்தி விட்டுப் போகும் கல்லாத