பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349

குதிரையைப் போன்றவர்களுடைய நட்பினை விடத். தனிமையாக இருப்பதே சிறப்பு உடையதாகும். .

5. செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று. 815.5 (ப-ரை செய்து . நன்மையினைச் செய்து வைத்தா லும், ஏமம் - பாதுகாப்பு, சாரா - ஆகாத, சிறியவர் - கீழ்மையானவர், புன் கேண்மை - தீய நட்பானது, எய்தலின் - உண்டாவதைவிட, எய்தாமை நன்று உண்டாகாமல் இருப்பதே நல்லதாகும்.

(கரை நன்மை நிற்குமாறு செய்து வைத்தாலும், பாதுகாப்பு ஆகாத கீழ்மையானவர்களின் தீய நட்பானது உண்டாவதைவிட உண்டாகாமல் இருப்பதே நல்லதாகும்.

6. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும். 816.

(ப. ரை) பேதை - அறிவில்லாதவர்களுடைய, பெரும் மிகவும், கெழீஇ - செறிந்த, நட்பின் - நட்பினைக் காட்டிலும், அறிவுடையார் - அறிவுடையவர்களுடைய, ஏதின்மை - பகைமையானது, கோடி - கோடி மடங்கு . உறும் - நல்லதேயாகும். -...

(கரை அறிவில்லாத பேதையினுடைய மிக நெருங்கிய நட்பினைவிட அறிவுடையவர்களது பகைமை கோடி மடங்கு நல்லதாகும்.

7. நகைவகைய ராகிய கட்பின் பகைவரால் .

பத்து அடுத்த கோடி உறும். 817 |ப-ரை நகை . நகைத்துக் கொண்டு மட்டும் இருக்கும், வகையர்- வகையினர், ஆகிய - ஆனவர், நட்பின்நட்பினால், (வரும் இன்பத்தைவிட பகைவரால் - பகை. வர்களால், ! வரும் துன்பங்கள்) பத்தடுத்தக் கோடி-பத்துக் கோடி மடங்கு, உறும் - நல்லவையாக இருக்கும். . . ;