பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

(கரை) அறிய வேண்டியதை அறியாமல் எப்போதும் நகைத்துக் கொண்டு மட்டும் இருக்கின்ற நட்பினால் வருவதைவிடப் பகைவரால் வருவது பத்துக் கோடி மடங்கு நல்லதாகும்.

8. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல். 818 Iu-wul ஒல்லும் - தம்மால் முடியக்கூடிய, கருமம் - செயலினையும், உடற்றுபவர் - முடியாததென்று இருப்ப வர்களுடன் கொண்ட, கேண்மை - நட்பினை, சொல்லா டார் . அவருக்குத் தெரிவித்துச் சொல்லாமலேயே, சோர . விடுவது தெரியாமலேயே, விடல் - நட்பினை விட்டு விடுதல் வேண்டும்.

|க-ரை) தம்மால் செய்து முடிக்கக் கூடிய செயல்களை யும் முடியாதென்று இருப்பவர்களுடன் கொண்ட நட்பினைக் கண்டால் சொல்லாமலேயே கைவிடுதல் வேண்டும்.

9. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு. 819 ப-ரை வினை - செய்யும் செயல், வேறு . வேறாக வும், சொல் - பேசும்சொல், வேறு வேறாகவும், பட்டார் . இருப்பவருடைய, தொடர்பு - நட்பானது, கனவிலும் . கனவிலும் கூட, இன்னாது - துன்பத்தினைத் தருவதாகும். (கரை) செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் இருப்பவர்களுடைய நட்பானது

கனவில்கூடத் துன்பத்தினைத் தருவதாகும்.

10. எனைத்தும் குறுகுதல் ஒம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு. 820

(ப.ரை) மனை . மனையில் இருக்கும்போது, கெழீஇ - நெருங்கிப் பழகி, மன்றில் பழிப்பார் . பலர் இருக்கும்