பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

351

மன்றத்தில் பழித்துப் பேசுபவருடைய, தொடர்பு - நட்பினை, எனைத்தும் - எவ்வளவு சிறிதேயானாலும், குறுகுதல் - தம்முடன் நெருங்குவதை, ஓம்பல் - விலக்குதல்

வேண்டும்.

(கரை) தனித்து வீட்டிலிருக்கும்போது நெருங்கிய நட்புடன் பழகி, பலர் கூடியிருக்கும் மன்றத்தில் பழித்துப் பேசுவோர் நட்புச் சிறிதளவேனும் தம்மைச் சாராமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

83. கூடா நட்பு

(மனத்தால் கூடாமல் இருக்கும் பகைவர் I5ււկl

1. சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா கிரந்தவர் கட்பு, 82}

ப-ரை) நேரா மனத்தால் கூடாதிருந்தே, நிரந்தவர் - தீமை செய்ய வாய்ப்புக் கிட்டும் வரையில்) புறத்தே நண்பர்கள் போல இருப்பவரது, நட்பு - நட்பு, சீரிடம் காணின் . (கெடுதி செய்ய வாய்க்குமிடத்தினைக் கண்டதும், எறிதற்கு - எறிதற்கு நசுக்குதற்கு)த் துணை யாக, பட்டடை - பட்டடை என்பதாகும்.

(க-ரை) மனத்தால் கூடாதிருந்து தீமையினைச் செய்வதற்குத் தக்க நேரம் வரும் வரையில் நட்பினர் போலப் பழகும் நட்பு, வாய்க்குமிடம் கண்டால் நன்றாக எறிதற்குத் துணையான பட்டடை போன்றதாகும்.

2. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும். 822.

(ப-ரை) இனம் - நமக்கு உற்ற இனத்தவர், போன்று - போல, இனம் - நமக்கு உற்றவர், அல்லாரி - அல்லாத