பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359

10. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840 |ப-ரை) சான்றோர் . மேலான சான்றோர்கள் இருக் கும், குழாஅத்து . அவையில், பேதைபுகல் - பேதையான வன் நுழைதல், கழாஅக்கால் - கழுவாத காலினை, பள்ளி கயில் - இன்பம் சுவைக்கும் அமளியின்மேல், வைத்தற்று .

வைத்தது போன்றதாகும் ஆல் அசை)

(கரை) சான்றோர்கள் நிறைந்திருக்கும் அவையில் பேதையானவன் நுழைதல், இன்பம் தரும் அமளிக்கண் து ய்மை அல்லாதவற்றை மிதித்த காலினை வைத்தது போன்றதாகும்.

85. புல்லறிவாண்மை

|அற்ப அறிவுள்ளவன் தன்னைச் சிறந்த அறிஞனாக எண்ணி நடத்தல்)

1. அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை இன்மையா வையாது உலகு. 841

(ப. ரை) இன்மையுள் . இல்லாமை பலவற்றிலும், இன்மை . இல்லாமையென்பது என்னவென்றால், அறிவு - அறிவு, இன்மை - இல்லாமையேயாகும், பிறிது . மற்றவை, இன்மை இல்லாமையினை, இன்மையா . அவ்வாறு இல்லாமையாக, உலகு - உலகத்தார். வையாது - கருத மாட்டார்கள்.

(கரை) ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமை அறிவில்லாமையேயாகும். மற்றைப் பொருளில் லாமையோ என்றால் அதனை இல்லாமையாக உலகத்தாரி கொள்ள மாட்டார்கள்.