பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

2. அறிவிலான் கெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்

இல்லை பெறுவான் தவம். 842.

(ப-ரை) அறிவிலான் . புல்லறிவாளன், நெஞ்சு . மனம், உவந்து - களித்து, ஈதல்.பிறர்க்குக் கொடுப்பானே. யானால், (அவ்வாறு கொடுப்பதற்கு காரணம்) பெறுவான். அதனைப் பெறுகின்றவனுடைய, தவம் - நல்வினையே! யாகும், பிறிது . வேறு, யாதும் எந்தக் காரணமும், இல்லை - இல்லையென்பதாகும்.

(கரை) புல்லறிவாளனானவன் ஒ ரு வ னு க் கு மனமுவந்து ஒன்று கொடுப்பானேகமானால் அதற்குக் காரணம் பெறுகின்றவனுடைய நல்வினையே அல்லாமல் வேறொன்றுமில்லையாகும்.

3. அறிவிலார் தாம்தம்மைப் பிழிக்கும் பிழை

செறுவார்க்கும் செய்தல் அரிது. 843.

(பரை அறிவிலார்-சிற்றறிவாளர்கள், தாம்.தமக்குத் தாமே, தம்மை - தங்களை பிழிக்கும் . துன்புறுத்திக். கொள்ளும், பீழை - துன்பமானது, செறுவார்க்கும் . அவர்களின் பகைவர்க்கும், செய்தல் அரிது செய்வதற்கு முடியாததாகும்.

(க-ரை) புல்லறிவுடையவர்கள் தமக்குத் தாமே உண்டாக்கிக் கொள்ளும் துன்பம், அவர்களுடைய பகைவர் களும் அவர்களுக்குச் செய்ய முடியாததாகும்.

4. வெண்மை எனப்படுவது யாதுனனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு. 844, Fபயரை வெண்மை . புல்லறிவுடைமை, எனப்படுவது. என்று சொல்லப்படுவது, பாது . எது, எனின் - என்று. கேட்டால், ஒண்மை - நல்லறிவு, உடையம் யாம் . யாம். உடையோம், என்னும் - என்று தம்மைத் தாமே மதித்துக் கொள்ளும், செருக்கு மயக்கமான எண்ணமாகும்.