பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

குடியோடு மாய்வார் - தமது குடியுடன் அப்போதே மடித்து விடுவார்.

(கரை) குன்றினையொத்த அ ரு ந் த வ த் தோர் கெட்டுப் போகுமாறு நினைப்பாராயின் அப்போதே இப் பூமியில் நிலைபெற்றுள்ள செல்வந்தர் தம் குடியோடும் அழிவர்.

9. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும். 899

|ப-ரை) ஏந்திய - உயர்ந்த, கொள்கையார் - நோன்பு கொண்ட கொள்கையாளர்கள்,சிறின் - சினம் கொள்ளுவா ரானால், இடை - நடுவே, வேந்து முரிந்து தனது ஆட்சி நிலை கெட்டு, வேந்தனும் கெடும் - சிறந்த அரசன் தானும் கெட்டுப் போவான்.

(க-ரை) காத்தற்கு அருமையான உயர்ந்த நோன்பு கள்ை யுடையார் கோபிப்பாராயின் அவர் ஆற்றலால் வேந்தனும் தனது நிலைகெட்டு அழிவான்.

10, இறந்து அமைந்த சார்புடைய ராயினும் உய்யார்

சிறந்து அமைந்த சீரார் செறின். 900.

ப-ரை) சிறந்து - மிகவும் சிறப்பாக, அமைந்த . அமைந்த, சீரார் - தவ ஆற்றல் பெற்றவர், செறின் . சினம் கொண்டு விட்டால், இறந்து - மிகவும் பெரியதாக, அமைந்த அமைந்த, சார்புடையார் - சார்பாகிய துணைகள் பலவும் உடையவர்கள், ஆயினும் உய்யார் - தப்பித்துவிட மாட்டார்கள். -

க-ரை) மிக்க தவத்தினையுடையார் கோபிப்பாராயின் அவரால் கோபிக்கப்பட்டவர் மிகப் பெரிய படைபலம். முதலியன் உடையவராயினும் தப்பிக்க மாட்டார்.