பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

381

8, எரியாற் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார் .

பெரியார்ப் பிழைத்தொழுகு வார். , , 896

(ப-ரை எரியால் . காட்டிற்குச் சென்றவன்) அவ் விடத்தில் நெருப்பினால், சுடப்படினும் . சுடப்பட்டாலும், உய்வு உண்டாம்-ஒரு வழியில் உயிர் தப்புதல் உண்டாகும், பெரியார் - ஆற்றல் மிக்க பெரியார்களுக்கு, பிழை . குற்றம் செய்து, ஒழுகுவார் . நடப்பவர்கள், உய்யார் . எவ்வழியிலும் உயிர் தப்பிக்க மாட்டார்கள்.

(க-ரை தீயாற் சுடப்பட்டாலும் ஒரு வழியில் உயிர்த் தப்புதல் முடியும். பேராற்றல் கொண்ட பெரியோர் களுக்குக் குற்றம் செய்து நடந்து கொள்பவர்கள் எவ்விதத் திலும் உயிர் தப்புதல் முடியாததாகும்.

7. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின். 897

(ப-ரை) தகைமாண்ட - ஆற்றல் மிக்க பெருமையால் சிறப்படைந்த, தக்கார் . அருந்தவத்தோர், செறின் . சினம் கொள்ளுவாரானால், வகைமாண்ட - பலவகை உறுப்புக் களால் பெருமைப்பட்ட, வாழ்க்கையும் . உயர்ந்த அரச வாழ்க்கையும், வான் - ஈட்டி வைத்த மிகப் பெரிய, பொருளும் . பொருளும், என்னாம் . என்னவாகும்.

|க-ரை மாட்சிமைப்பட்டுப் பெருமை நிறைந்தவர்கள், அருந்தவத்தோர் கோபிப்பாராயின் மிகச் சிறப்பான அவர்களுடைய வாழ்வும் பெரும் பொருளும் என்னவாகும்?

8. குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

கின்றன்னார் மாய்வர் கிலத்து. 898 ப-ரை) குன்று - மலைக்குன்றினை, அன்னார் - ஒத்த அருந்தவப் பெரியார்கள், குன்ற மதிப்பின் . ஒருவன் கெட்டுவிட நினைப்பாரானால், நிலத்து-பூமியில், நின்றன் அனார் . நிலைத்து இருப்பதைப் போன்ற செல்வந்தர்,