பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

மன்னரிடத்தில், இழுக்கு - குற்றத்தினை, கெடல் . தான் கெட்டுப்போக, வேண்டின் - விரும்பினால், கேளாது . நீதி நூல்களில் கூறியவற்றையும் கேளாமல், செய்க.

செய்வானாக.

- [ક-air] பிறரை அழிக்க வேண்டிய போது அதனை அப்பொழுதே செய்யவல்ல ஆற்றல் படைத்தவர்களிடத் தில், தான் கெட்டுவிட விரும்பினால் நீதி நூல்களையும் கடந்து குற்றங்களைச் செய்வானாக.

4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு.

ஆற்றாதார் இன்னா செயல். 894

(ப-ரை) ஆற்றுவார்க்கு - ஆற்றல் மிக்கவர்களுக்கு ஆற்றாதார் . ஆற்றல் இல்லாதார், இன்னா செயல் துன்பங்களைச் செய்தல், கூற்றத்தை உயிர் கொள்ளும் கூற்றுவனை, கையால் விளித்தற்று - கையினைக் காட்டி அழைத்ததற்குச் சமமாகும்.

(க-ரை) ஆற்றல் மிக்கவர்களுக்கு அவ்வாற்றல் இல்லா தார் தாம் முற்பட்டுத் துன்பத்தினைச் செய்தல், தானே வரக்கூடிய கூற்றுவனை அதற்கு முன்னதாகவே கையால் அழைத்தது போன்றதாகும்.

5. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர். 895.

|ப-ரை) வெந்துப்பின் . மிக்க வல்லமை நிறைந்த, வேந்து - வேந்தனால், செறப்பட்டவர் . கோபிக்கப் பட்டவர்கள், யாண்டு - அவனிடமிருந்து தப்பி எங்கே சென்று - போய் இருப்பார், பாண்டும் . எந்த இடத்திலும், உளர் -'இருப்பவர், ஆகார் . ஆக மாட்டார்கள்.

(கரை) வலிமை மிகுந்த வேந்தனால் கோபிக்கப் பட்டவர்கள் அவனிடமிருந்து தப்பி எங்கே சென்றாலும்

உயிர் வாழமாட்டார்கள். - - - -