பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. பெரியாரைப் பிழையாமை

(ஆற்றல்களினால் பெரியாராயினோரை அவமதித்து நடக்காதிருத்தல்) 1. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவாள்

போற்றலுள் எல்லாம் தலை. 891 (ப-ரை) ஆற்றுவார் . சிறந்த ஆற்றல் மிக்கவர்களின், ஆற்றல் இகழாமை வல்லமைகளை இகழாதிருத்தல், போற்றுவார் . தமக்குத் தீமைவராமல் காப்பவருடைய, போற்றலுள் - போற்றிக் காக்கும் காவல்கள், எல்லாம் தலை - எல்லாவற்றினும் சிறந்ததாகும்.

(கரை) எடுத்ததை முடிக்கும் ஆற்றல் படைத்தவர் களுடைய வல்லமைகளை அவமதியாது நடந்து கொள்ளு தல் என்பது, தமக்குத் தீங்கு வராமல் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் மிக்கதாகும்.

2. பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா இடும்பை தரும். - 892;

(ப-ரை) பெரியாரை . ஆற்றல்களினால் பெரியோர் கள் ஆனவர்களை, பேணாது . நன்கு போற்றி மதியாமல், ஒழுகின் - நடப்பாராகில், பெரியாரால் . அப்பெரியோர் களால், பேரா - நீங்காத, இடும்பை - துன்பங்கள், தரும் . உண்டாவதாகும்.

(க-ரை ஆற்றல்களினால் பெரியாராயினோரைப் போற்றாமல் அவமதித்து நடப்பானானால் அப்பெரியாரால் எக்காலத்திலும் அவனுக்கு நீங்காத துன்பங்கள்

உண்டாகும். с

3. கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. 893 (ப-ரை அடல் - மாற்றாரைக் கொல்ல, வேண்டின் - வேண்டியபோது, ஆற்றுபவர்கண் . அதனைச் செய்யவல்ல