பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

பினைப் போல, பொருது - தேய்க்கப்பட்டு, உரம் தேயும் .

தனது வலிமை தேய்ந்து விடும்.

(கரை) உட்பகை உண்டாகியிருக்கும் குடியானது அரத்தினால் தேய்க்கப்பட்ட இரும்பினைப் போலத் தேய்க்கப்பட்டுத் தனது வலிமை தேய்ந்து விடுவதாகும்.

9. எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாம் கேடு. 889

(ப-ரை) உட்பகை - உட்பகையானது, எட்பகவு . எள்ளினது பிளவினை, அன்ன - ஒத்திருக்கும், சிறுமைத்தே . சிறுமையுடையதே, ஆயினும்.ஆனாலும், கேடு உள்ளதாம். அதனால் வரும் செடுதி அதனுள்ளே இருப்பதாகும்.

(க-ரை உட்பகை எள்ளின் அளவு போன்று சிறுமை அடையதே ஆனாலும், பெருமையெல்லாம் அழிக்கக் கூடிய கேடு அதனுள்ளே இருப்பதாகும்.

10. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடன்உறைக் தற்று. 890

ப-ரை உடம்ப்ாடு - மனப் பொருத்தம், இல்லா தவர் - இல்லாதவருடன், வாழ்க்கை கூடி வாழ்கின்ற வாழ்க்கையானது, குடங்கருள் - ஒரு குடிசையினுள், பாம்போடு - பாம்புடன், உடன் சேர்ந்து, உறைந்தற்று - வாழ்வதைப் போன்றதாகும்.
க-ரை) உள்ளத்தில் பொருத்தம் இல்லாதவரோடு கூடிவாழும் வாழ்க்கை ஒரு குடிசையினுள்ளே பாம்புடன் கடிவாழ்வதைப் போன்றதாகும்.