பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

377

(கரை) புறத்தில் உறவு முறைத் தன்மையோடு கூடிய உட்பகை வேந்தனுக்கு உண்டாகிவிட்டால் அது அவனுக்கு. இறத்தல் முதலிய குற்றங்களையெல்லாம் தந்து விடும்.

8. ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது. - 886 (ப-ரை ஒன்றாமை - பகை என்பது, ஒன்றியார் கண்படின் - உள்ளுக்குள்ளே இருப்பவரிடத்தில் உண்டாகி விடுமானால், பொன்றாமை - இறவாதிருத்தல், ஒன்றல் - முடியும் என்பது, எஞ்ஞான்றும் அரிது - எந்த நாளிலும் அருமையானதாகும் (முடியாததாகும்). - (க-ரை) பகைமை தனக்கு உள்ளாயினாரிடத்திலேயே உண்டாகிவிடுமானால் அரசனுக்கு இறவாமை என்பது. முடியாததாகிவிடும், - - - -

  • *

7. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே -

உட்பகை உற்ற குடி. 887°

(ப-ரை) செப்பின் - செப்பினுடைய, புணர்ச்சி போல். சேர்ந்திருக்கும் தன்மை போல், கூடினும் (வெளித் தோற்றத்திற்குக்) கூடிக் காணப்பட்டாலும், உட்பகை - உள்ளாகிய பகை, உற்றகுடி . உண்டாகியிருக்கும் குடியி லுள்ளவர்கள், கூடாதே மனத்தால் கூடமாட்டார்கள்.

(க-ரை) செப்பு ஒன்றுகூடி இருப்பதுபோலப் புறத்தில் வேற்றுமை தெரியாமல் கூடினாராயினும் உட்பகை உண்டான குடியிலுள்ளவர்கள் மனத்தால் தம்முள் கூடமாட்டார்கள். - - to: 8. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது:

உட்பகை உற்ற குடி. 888 (ப-ரை) உட்பகை உட்பகையானது, உற்ற .

உண்டாகியிருக்கும், குடி . குடியானது, அரம் - அரத்தி னால், பொருத தேய்க்கப்பட்ட, பொன் போல் . இரும்: