பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

3. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மானத் தெறும். 883, (ப-ரை உட்பகை - உட்பகைக்கு அஞ்சி - அச்சப் பட்டு, தற்காக்க - தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும், (அப்படி நடக்காவிட்டால்) உலைவிடத்து - தமக்கு ஒரு சோர்வு வந்த போது, மட்பகையின் - குயவர் மட் கலத்தினை அறுக்கின்ற கருவிபோல, மாண - தப்பாமல், தெறும் . உட்பகையினர் கெடுத்துவிடுவர். .

(க-ரை உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், குயவன் மட்கலத்தினை அறுக்கும் கருவிபோல மறைவாக இருந்தே கெடுத்துவிடுவர். .

4. மனம்மானா உட்பகை தோன்றின் இனம்மாணா

ஏதம் பலவும் தரும். 884, (ப-ரை) மனம் மனம், மாணா -திருந்தாத, உட்பகை. உள்ளுக்குள்ளான பகை, தோன்றின் உண்டாகிவிட்டால், இனம் . சுற்றம், மானா . தனது வசம் இல்லாமைக்குக் காரணமான, ஏதம் - குற்றம், பலவும் . பலவற்றையும், தரும் . தந்துவிடும்.

|க-ரை! புறத்தில் திருந்தியதுபோல இருந்து உள்ளுக் குள்ளே திருந்தாத உட்பகை உண்டாகிவிட்டால் அது அவனுக்குத் தனது சுற்றத்தார் தனது வசப்படாமைக்குக் காரணமான குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.

5. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும். 883 (ப-ரை) உறல் - உறவின், முறையான் . முறையினரி யல்போடு சேர்ந்த, உட்பகை - உட்பகையானது,

தோன்றின் - தோன்றிவிட்டால், இறல் - இறத்தல், முறை பர்ன் - த்ன்மையோடு கூடிய, ஏதம் - குற்றங்கள், பலவும் . பலவற்றையும், தரும் - தந்துவிடும். ... . "