பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385

(க-ரை) தனது மனையாளுக்கு அஞ்சி நடப்பவன் தான் தேடிய பொருளேயானாலும் நல்லவர்களுக்கு எப்போதும் நல்லன செய்தற்கு அஞ்சி இருப்பவனாவான்.

8. இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

அமைஆர்தோள் அஞ்சு பவர். 906

(ப-ரை) இல்லாள் - இல்லாளுடைய, அமையார் . மூங்கில் போன்ற, தோள்.தோள்களுக்கு, அஞ்சுபவர்-அஞ்சு கிறவர்கள், இமையாரின் வாழினும் - இமையவர்களைப் போல வாழ்ந்தாலும், பாடு - பெருமை, இலரே . இல்லாத வரிகளே யாவார்கள். - -

(கரை) தம் இல்லாளுடைய வேல் போன்ற தோள் களுக்கு அஞ்சி நடப்பவர் இமையவர்கள் போல இவ்வுலகில் வாழ்ந்தாலும் ஆண்மை இல்லாதவர்களாவர்.

7. பெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மையின் காண்உடைப் பெண்ணே பெருமை உடைத்து. 907

(ப-ரை) பெண் - மனைவிக்கு, ஏவல் செய்து . அவள் கட்டளையிட்ட தொழிலினைச் செய்து கொண்டு,ஒழுகும். தடக்கின்ற, ஆண்மையின் . ஆண்தன்மையினைக் காட்டி லும், நாண் - நாணத்தினை, உடை - உடைய, பெண்ணே - பெண் தன்மையே, பெருமை உடைத்து. பெருமையினை உடையதாகும்.

(கரை) நாணம் இல்லாமல் இல்லாளுக்கு ஏவல் தொழில் செய்து திரிகின்றவனுடைய ஆண் தன்மை பினைவிட நாணமுடைய பெண் தன்மையே பெருமை கபுடையதாகும். 8. கட்டார் குறைமுடியார் கன்றுஆற்றார் கல்நுதலாள்

பெட்டாங்கு ஒழுகு பவர். r 908 (ப.ரை) நல் - அழகுள்ள, துதலாள் - நெற்றி பினை

உடைய இல்லாள், பெட்டாங்கு - வேண்டியபடி, ஒழுகு

தி,தெ.-25