பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

(கரை) ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து அதனை அடையும் வரையில் பண்புடைமை பேகம் பண்பில்லாத மகளிரது நடத்தையினை ஆராய்ந்தறிந்து அவர்களைப் பொருந்தாது விடுதல் வேண்டும்.

3. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணக்தழி இயற்று. 913

(ப-ரை பொருட்பெண்டிர் - கொடுப்பவர்களை இச்சிக்காமல் பொருளையே விரும்பும் பொது மகளிரது, பொய்ம்மை - பொய்மையுடைய, முயக்கம் தழுவுதல் என்பது, இருட்டு - இருண்ட, அறையில் அறையில், ஏதில் - அறிந்திராத, பிணம் தழிஇயற்று - பிணத்தினைத் தழுவியது போன்றதாகும்.

|க-ரை பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையுடைய முயக்கம் பிணம் தூக்குவோர் இருட் உறையொன்றில் முன்னறியாத பிணத்தினைத் தழுவினது போன்றதாகும். * - .

4. பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்

ஆயும் அறிவி னவர். 914

|ப-ரை) பொருட்பொருளார் . பொருளையே பொரு கனாக விரும்பி இன்பத்தினை விரும்பாத மகளிரது, புன்னலம் - புல்லிய அற்பமான இன்பத்தினை, அருள் . அருளுடன் பொருந்திய, பொருள் - மெய்ப் பொருளினை, ஆயும் - ஆராய்ந்து சேர்க்கும், அறிவினவர் தோயார் . அறிவினையுடையவர்கள் தீண்டமாட்டார்கள்.

(க-ரை அருளோடு கூடிய பொருளை ஆராயும் அறிவுடையார் இன்பமாகிய பொருளை இழந்து பொரு ளாகிய பொருளையே விரும்பும் மகளிரது அற்ப இன்பத் தினைத் தீண்டமாட்டார்கள். .