பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

399

உடம்பினால் அனுபவிக்கும் போதெல்லாம், காதற்று . அவ்வுடம்பின்மீது ஆசை கொள்ளுவதாகின்றது.

(க-ரை) இழக்குந்தோறும் அச்சூதின் மேல் காதல் செய்யும் சூதினைப்போல உடம்பால் துன்பம் அனுபவிக்குந்: தோறும் அதன்மேல் உயிர் காதலை உடைத்தாகும்.

95. மருந்து (பிணி தீர்க்கும் மருந்து பற்றியன கூறல்)

1. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று. 941

(ப-ரை) மிகினும் . ஒருவனுடைய அளவிற்கு மிகுந் தாலும், குறையினும் - குறைந்தாலும், நூலோர் . மருத்துவ நூலாரால், வளி வாதம், முதலா - முதலாக, எண்ணிய-கூறப்பட்ட, மூன்று. மூன்றும், நோய் செய்யும். அவனுக்கு நோயினை உண்டாக்கும்.

(க-ரை உணவு செயல்களும் ஒருவனுடைய அளவுக்கு மிகுமாயினும் குறையுமாயினும் வாதம் முதலாகக் கூறப் பட்ட மூன்று நோயும் துன்பத்தினைக் கொடுக்கும்.

2. மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின். 942

(ப-ரை) அருந்தியது - முன்னர் உண்ணப்பட்ட உணவு, அற்றது - செரித்து விட்டதை, போற்றி - தெளிய அறிந்து கொண்டு, உணின் . பின்பு உண்பானானால், யாக்கைக்கு. அவனுடைய உடம்புக்கு, மருந்து - மருந்து, என - என்ற வேறொன்று, வேண்டாவாம் - வேண்டியதில்லையாம்.

(கரை) ஒருவன், தான் முன்னதாக உண்ட உணவு. அற்ற நில்ையை (சீரணித்ததை) அறிந்து பின் உண்ணு வா