பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

8. கோய்ாாடி கோய்முதல்காடி அது தணிக்கும்

வாய்காடி வாய்ப்பச் செயல். 94密

(ப-ரை) நோய் - பிணியுற்றோன் பிணியினை, நாடி குறிகளால் அறிந்து, நோய் நோய் வருவதற்கு, முதல் அடிப்படைக் காரணத்தினை, நாடி - ஆராய்ந்தறிந்து, அது . அந்த நோயினை, தணிக்கும் . தீர்க்கும், வாய் . வழியினை, நாடி - அறிந்து, வாய்ப்ப அதனைச் செய்யும் வழியினைப் பிழைபடாமல், செயல் - செய்தல் வேண்டும்.

(க-ரை) மருத்துவன் குறிகளால் நோயினை இன்ன தென்று அறிந்து, பின் அது வருதற்குக் காரணத்தினை ஆராய்ந்து அறிந்து அதனை நீக்கும் வழியினை அறிந்து அதனைச் செய்யும் முறை பிழையாமல் செய்தல் வேண்டும்.

9. உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல். 949

(ப-ரை) கற்றான் நூல்கலைக் கற்ற மருத்துவன், உற்றான். நோயுற்றான், அளவும் - அளவினையும், பிணி . நோயினுடைய, அளவு - அளவினையும், காலமும் . தன் செயலுக்கு ஏற்ற காலத்தினையும், கருதிச் செயல் . நூல் நெறியால் நோக்கி அவற்றிற்கு ஏற்பச் செய்தல் வேண்டும்.

(கரை) மருத்துவ நூல்களைக் கற்ற மருத்துவன் நோயுற்றோன் அளவினையும், நோயின் அளவினையும், செய்தற்கு ஏற்ற காலத்தையும் நூல் நெறியால் அறிந்து. அவற்றோடு பொருந்தச் செய்தல் வேண்டும்.

10. உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான்என்று

அப்பால்காற் கூற்றே மருந்து. 950, |ப-ரை) மருந்து - நோய்க்கு மருந்தானது, உற்றவன் . நோயுற்றவன், தீர்ப்பான் - நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து - மருந்து, உழைச் செல்வான் - மருந்தினைப்