பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

401

அளவு உண்ணாமல்) மறுத்து உண்ணின் சீரணிக்கும் அளவு உண்டால், உயிர்க்கு - அவனுடைய உயிர்க்கு, ஊறுபாடு - நோய்களினால் துன்பம் உண்டாதல், இல்லை. இல்லையாகும்.

(க.ரை) மாறுபட்ட தன்மைகள் இல்லாத உணவினை மனம் விரும்பிய அளவு உண்ணாமல் அளவறிந்து -உண்பானானால் அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது.

6. இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் கிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய். 946

|ப-ரை இழிவு - குறைவாக உண்ணுவதை நல்ல தென்று, அறிந்து . அறிந்து கொண்டு, உண்பான்கண் .

உண்பவனிடத்தில், இன்பம் போல - இருக்கின்ற இன்பத்தினைப் போல, கழி - மிகவும், பேர் பெரிய, இரையான்கண் - இரையினைத் தின்பவனிடத்தில்,

நோய் - நோய், நிற்கும்-நீங்காது.

(க-ரை குறைவாக உண்பதை நல்லதென்று அறிந்து உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பதைப் போல, மிகப் பெரிய இரையை விழுங்குகிறவனிடம் நோய் நீங்காமல் நிலைத்து நிற்கும்.

7. தீயளவன்றித் தெரியான் பெரிது உண்ணின்

நோய்அள வின்றிப் படும். 947 |ப.ரை தெரியான் - (தனது உடம்பின் தன்மை யினையும் அளவும் காலமும்) தெரியாதவனாகி, தீயள வின்றி . வயிற்று பசியினளவுக்கு மீறி, பெரிது - அதிகமாக, உண்ணின் - உண்ணுவானானால் அவனிடம்) நோய் . நோய்கள், அளவு அளவு, இன்றி - இல்லாமல், படும் .

உண்டாகும். - . .

(கரை) பசியினளவும் சீரணிக்கும் அளவும் தெரியாத படி மிகுதியாக உண்ணுவானேயானால் அவனிடத்தில் நோய்கள் எல்லையற்று வளரும்.

தி. தெ.-26