பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

கூமர்ந்த தன்மையிலிருந்து, தலைப்பிரிதல் நீங்குதல், இன்று . இல்லையாகும் .

(கரை) தொன்று தொட்டு வருகின்ற நற்குடியில் பிறந்தவர்கள் தம்முடைய ஈகைத் தன்மையின் அளவு முன்னயதைவிட சுருங்கியபோதும் தம்முடைய பண்புடை மையினின்றும் நீங்கமாட்டார்கள்.

6. சலம்பற்றிச் சால்பில செய்யார்மாசு அற்ற

குலம்பற்றி வாழ்தும் என்பார். 959

(ப. ரை) மாசு - குற்றம், அற்ற - இல்லாத, குலம்பற்றி. தமது குடியின் பரம்பரைத் தன்மையில் நின்று, வாழ்தும் . வாழ்ந்து வருவோம், என்பார் . என்பவர்கள், சலம்பற்றி . வஞ்சனைத் தன்மை கொண்டு, சால்பு - பெருந்தன்மைக்கு, இல - பொருந்தாத .ெ தா ழி ல் க ைள, செய்யார் . செய்யமாட்டார்கள்.

(க-ரை குற்றமின்றி வருகின்ற தமது குடிமரபினோடு ஒத்து வாழக் கடவோம் என்று வாழ்பவர்கள்,வறுமையுற்ற காலத்திலும் வஞ்சனையால் தமக்குப் பொருந்தாத செயல் களைச் செய்ய மாட்டார்கள்.

7. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. 957

(ப-ரை) குடி . உயர்ந்த(மேலானவர்கள் பிறந்திருக்கும்) குடியில், பிறந்தார்கண் . பிறந்தவர்களிடத்தில், குற்றம் - காணப்படுகின்ற குற்றமானது, சிறிதாக இருந்தாலும்! விசும்பின் . வானத்தில் தோன்றும்,மதிக்கண்.சந்திரனிடத் தில் காணப்படும், மறுப்போல் - களங்கத்தினைப் போல, உயர்ந்து விளங்கும் . ஓங்கித் தோன்றுவதாகி விடும்.

(க-ரை) உயர்ந்த குடியில் பிறந்தவரிடம் காணப்படும் குற்றம் சிறிதாக இருந்தாலும் வானத்தில் மதியினிடம் மறுப்

போல ஓங்கித் தோன்றும்.