பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

8. புகழ்இன்றால் புத்தோள்காட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று கிலை. 966

|ப-ரை இகழ்வார் . தன்னை அவமதிப்பார், பின் . பின்னே, சென்று நிலை . (மானத்தைவிட்டு) சென்று நிற்கின்ற நிலை, புகழ் - இவ்வுலகிலும் புகழினை, இன்றால் - தராது, புத்தேள் நாட்டு புத்தேளிர் நாட்டி லும், உய்யாது - அவனைச் செலுத்தாது, (அப்படியிருக்க) மற்று என் . அவன் அவ்வாறு நடந்து கொள்வது ஏன்?

(க-ரை மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார்

பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை இவ்வுலகில்

புகழினையும் கொடுக்காது. புத்தேள் உலகத்தும் செலுத் தாது. இனி, அவன் அப்படி நடப்பது ஏன்?

7. ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அங்கிலையே

கெட்டான் எனப்படுதல் கன்று. 967

tu-ரை) ஒட்டார் - தன்னை இகழ்பவர், பின் . பின்னே, சென்று போய், ஒருவன் - ஒருவன், வாழ்தலின் . உயிர் வாழ்வதைவிட, அந்நிலையே தனது நிலையில் நின்றே, கெட்டான் . இறந்தான், எனப்படுதல் நன்று - சொல்லப்படுதல் நல்லதாகும்.

(கரை) தன்னை இகழ்வார் பின்னே சென்று ஒருவன் வாழ்வதைவிட அப்படிச் செய்யாமல் இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று.

8. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடுஅழிய வந்த இடத்து. 968

(ப-ரை பெருந்தகைமை - உயர்குடிப் பிறப்பின் தன்மையான, பீடு . பெருமையாகிய மானம், அழிய . அழிந்து போக, வந்த இடத்து - வந்தகாலத்தில் இறவாமல்) ஊன் - உடம்பினை, ஒம்பும் - காப்பாற்றும்