பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

411

வாழ்க்கை -வாழ்க்கையானது, மற்று மருந்தோ - பின்னும் பிறவாதிருப்பதற்கு மருந்தாகுமோ?

1.க-ரை) உயர்குடிப் பிறப்புத் தன்மையாகிய மானம் அழிய வந்தபோது இறவாமல் இவ்வுடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாகுமோ?

9. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின். ப-ரை) மயிர் . தனது மயிர்த்திரளில் ஒரு மயிர், நீப்பின் நீங்கினாலும், வாழா. உயிர் வாழாத, கவரிமா . கவரிமானை, அன்னார் . ஒத்தவர்கள், மானம் வரின் ம தங்கள் மானம் பெருமளவு கெடவரின், உயிர் நீப்பர் - கடயிரை விட்டு விடுவர் . -

(கரை) தன்னுடைய மயிர்த்திரளில் ஒரு மயிர் நீங்கி :னாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள் .தங்கள் (உயிரி நீங்குவதற்கான) மானம் கெடவரின்

தாங்காது இறப்பர்.

10. இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு. 970 ப-ரை) இளிவரின் - ஓர் இழிவு வந்தபோது, வாழாதஉயிர் வாழாமல் உயிர் நீத்த மானம் - மானத்தினை, உடையர் - உடையர்களது. ஒளி - புகழினை, உலகு - உலகத்தார், தொழுது - வணங்கி, ஏத்தும் . துதிப்பர்.

(க-ரை தமது மானத்திற்கு இழிவு வந்துற்றபோது உயிர் வாழாமல் இதனை நீத்த, மானமுடையாரது புகழ் வழியினை எப்போதும் உலகத்தார் தொழுது துதிப்பர்.

969