பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. பெருமை

(மிகச்சிறந்த நற்குணங்களால் பெரியாராயினோரது தன்மைகள்)

1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளியொருவற்கு

அஃது இறந்து வாழ்தும் எனல். 97 to |ப-ரை) ஒருவற்கு ஒருவனுக்கு, ஒளி - புகழ் என்பது, உள்ள செயற்கரிய .ெ ச ய் .ே வா ம் என்று கருதும், வெறுக்கை - ஊக்க மிகுதியாகும், ஒருவற்கு ஒருவனுக்கும் இளி - குற்றமாவது, (என்னவென்றால்) அஃது - அச் செயலை, இறந்து - நீக்கி, வாழ்தும் . வாழ்ந்திருப்போம், எனல் - என்று நினைப்பதாகும்.

(க-ரை) ஒருவனுக்குப் புகழாவது பிறரால் செயற்கரிய, செய்வோம் என்று கருதும் ஊக்க மிகுதியேயாகும். ஒருவனுக்கு இழிவாவது அச்செயலினை ஒழித்து வாழக் கடவோம் என்று கருதுதலாகும்.

2. பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். 97.2

நிப-ரை எல்லா - எல்லா, உயிர்க்கும் . மக்கள் உயிர்க் கும், பிறப்பு ஒக்கும் பொதுவாக இருக்கும் பிறப்பின் தன்மை ஒரு தன்மையாகத்தான் இருக்கும், ஆனால்), செய் . அவரவர் செய்கின்ற, தொழில் நல்லன தீயன வாகிய தொழில்களது. வேற்றுமையான். வேறுபாட்டால், சிறப்பு - பெருமை சிறுமை என்று கூறப்படும் சிறப்புத் தன்மைகள், ஒவ்வா ஒத்திருக்காவாம்.

(க-ரை எல்லா மக்களுயிரிக்கும் பொதுவாகிய பிறப்பின் தன்மைஒத்ததேயென்றாலும், பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா. ஏனெனில், அவை: