பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413

அவரவர் செ ய் யு ம் தொழில்களது வேறுபாட்டால், என்பதாகும்.

3. மேல்இருந்தும் மேலல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும்

கீழ் அல்லார் கீழல் லவர். 973

(ப.ரை) மேல் - மேலான செயல்களை, அல்லர் : செய்யாமல் சிறியராயினர், மேல் . உயர்ந்த நிலையில், இருந்தும் . இருந்தாலும், மேல் - மேலான பெரியோர், அல்லர் . ஆகமாட்டார்கள், கீழ் அல்லவர் அரிய செயல் புரிந்து பெரியாராயினோர், கீழ் - தாழ்ந்த நிலையில், இருந்தும் . இருந்தாலும், கீழ் அல்லார் - சிறியராக காட்டார்கள்.

(கரை) செயற்கரிய செய்யாமல் சிறியராயினோர் உயர்ந்த நிலைகளில் இருந்தாராயினும் பெரியராகார். அச் செயல்களைச் செய்து பெரியராயினோர் தாழ்ந்த நிலை யில் இருந்தாலும் சிறியராகார்.

4. ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. 974

(ப-ரை) ஒருமை - உறுதிப்பாடான ஒரு மனங் கொண்ட, மகளிரே போல - கற்புள்ள பெண்களைப் போல, பெருமையும் . பெருஞ்சிறப்பும், தன்னைத்தான் - நிறைகுணத்தில் வழுவாமல் தன்னைத்தானே, கொண்டு - நிறை குணத்திலிருந்து காத்துக்கொண்டு, ஒழுகின் - நடப்பானாகில், உண்டு - உண்டாகும். -

கடரை) மாறுபடாத மனத்தினையுடைய மகளிர் நிறைகுணத்தில் வழுவாமல் தம்மைக் காத்துக்கொண்டு ஒழுகுதல் போல, பெருமைக்குணமும் ஒருவன் நிறை குணத் தில் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு நடப் வானாகில் உண்டாவதாகும். |