பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல். 975.

(ப-ரை) பெருமை - பெருமைக்குணம், உடையவர் . உடைய பெரியோர்கள், அருமையுடைய . செயற்கரியவை யான, செயல் - செயல்களை, ஆற்றின் - செய்து முடிக்க வேண்டிய நல்ல நெறியில், ஆற்றுவார் . செய்து முடிப்பு தில் வல்லவராவார்.

(க-ரை) பெருமையுடையவர் தாம் வறுமையிலிருந் தாலும் பிறரால் செய்தற்கு அருமையான செயல்களை விடாமல் அவைகளைச் செய்யும் நெறியில் முடிவு பெறச் செய்வதில் வல்லவராவர்.

6, சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக்கொள் வேம்என்னும் கோக்கு, 976.

(ப-ரை பெரியாரை பெரியாரை, பேணி - போற்றி. அவt வழி நின்று, கொள்வோம் . அவர் இயல்பினைக் கொள்ளுவோம், என்னும் . என்கின்ற, நோக்கு - சிந்தனை, சிறியார் . சிறியவர்களுடைய, உணர்ச்சியுள் . மனத்தில், இல்லை - இருக்காது.

(க-ரை) ஆற்றல் மிகுந்த பெரியோரை வழிபட்டு அவர் இயல்பினைக் கைக் கொள்ளுவோம் என்னும் கருத்து, மற்றைச் சிறியோர் மனத்தில் உண்டாகாது.

7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புக்தான்

சீரல் லவர்கண் படின். 977.

|ப-ரை சிறப்புந்தான் - சிறப்பானவை என்று கருதப் படுபவையும், சீர் . பெருமைக்கு, அல்லவர்கண் - தகுதி. யற்ற சிறியவர்களிடத்தில், படின் . இருந்து விடுமானால், இறப்பே புரிந்த அமைதியின்றிச் செருக்கு மிகுந்து செய்யும், தொழிற்றாம் . தொழில்களையே செய்யுமாம்.