பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421

உடைமை, என்னும் . என்று கூறப்படும், வழக்கு - நன்னெறியாகும். +

|க-ரை) பிறர்மேல் அன்புடையவராதலும், தொன்று தொட்டு வந்த நற்குடிப்பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ஒருவனுக்குப் பண்புடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறியாகும். - -

3. உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க

பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு. 993,

(ப-ரை) உறுப்பு. உடம்பு உறுப்புக்களால், ஒத்தல் , பிறருடன் ஒத்திருத்த்ல், மக்கள். மக்களோடு, ஒப்பு அன்று. பொருந்திய ஒப்பாகாது, ஒப்பதாம் . பொருந்துவதாகிய, ஒப்பு ஒத்திருத்தலாவது, வெறுத்தக்க நிலைபெருத லுடைய, பண்பு . பண்புடைமையால், ஒத்தல் - ஒத்திருத்த லாகும். (ஆல் - அசைநிலை)

(க-ரை உடம்பின் உறுப்புக்களால் ஒத்திருத்தல் ஒருவனுக்கு நன் மக்களோடு ஒப்பாகாமையினால் அது பொருந்துவதன்று. இனிப் பொருந்துவதாகிய ஒப்பாவது பண்புடைமையால் ஒத்திருத்தலாகும். -

4. கயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு. 994

(ப-ரை தயனொடு . நீதியுடன், நன்றி - அறத்தினை யும், புரிந்த விரும்புபவர்களாகி, பயனுடையார் தமக்கும் பிறர்க்கும் பயனுடைய மக்களது, பண்பு . பண்பினை , உலகு பாராட்டும் . உலக மக்கள் பாராட்டுவார்கள்.

(கரை) நீதியையும் அறத்தினையும் விரும்பி பிறர்க்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை உலகத் தார் கொண்டாடி நிற்பர். -