பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

5. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்

பண்பு:உள பாடறிவார் மாட்டு. 995

|ப-ரை இகழ்ச்சி - தன்னை இகழ்தல் என்பது, நகையுள்ளும் . விளையாட்டின் கண்ணும், இன்னாது . துன்பத்தினைத் தருவதாகும், பாடறிவார் . பிறர் தன்மை யறிந்து நடப்பவரிடத்து,பகையுள்ளும் - பகைமையுண்டான காலத்திலும், பண்பு உள - இனிமையான பண்புகள் இருப்பனவாகும்.

(கரை) தன்னை இகழ்தல் என்பது ஒருவற்கு விளை பாட்டின் கண்ணும் துன்பம் தருவதாகும். ஆதலால் பிறருடைய தன்மையறிந்து நடப்பவரிடத்தில் பகையுள்ள போதும் இனிமையான நற்பண்புகள் இருப்பனவாகும்.

6. பண்புஉடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். 996

{ப-ரை) பண்பு உடையார் . பண்பு நிறைந்த மக்க ளிடத்திலே, பட்டு - இருந்து வருவதால், உலகம் உண்டு. உலகியல் நடப்பு எப்போதும் நிலை பெற்று நடந்து வருவதாகின்றது, இன்றேல் . அவ்வாறு பண்புடையார் மாட்டு இல்லையானால், அது . அந்த உலகியல், மன் . மண்ணிலே, புக்கு புகுந்து, மாய்வது . மாய்ந்து போவ தாகும், மன் - அசைநிலை)

(க-ரை) பண்புடையவர்கள் இந்த உலகின் கண்ணே உள்ளதால் உலகியல் எந்நாளும் இருந்து வருவதாகின்றது. அவ்வாறு இல்லையாயின் அது மண்ணில் புகுந்து மாய்ந்து போவதாகும்.

7. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர். 997

[u-er மக்கள் - நன்மக்களுக்கு இருக்க வேண்டிய, பண்பு . நற்குணம், இல்லாதவர் . இல்லாதவரிகள், அரம்