பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

9. குலம்சுடும் கொள்கை பிழைப்பின் கலம்சுடும்

காண் இன்மை கின்றக் கடை. 1019

ப-ரை கொள்கை - ஒருவனுடைய ஒழுக்கம், பிழைப் பின் - கெட்டுவிட்டால், அது குலம் கடும் - குலப்பிறப் பினைக் கெடுப்பதாகும், நாண் - நாணம் என்பது, இன்மை. இல்லாமை, நின்றக்கடை - அவனிடம் இருந்துவிட்டால், (அது நலன் - நன்மை யாவையினையும், சுடும் - அழித்து விடுவதாகும்,

- (கரை) ஒருவனுக்கு ஒழுக்கம் கெடுமாயின் அப்படிக் கெடுதல் அவனுடைய குடிப்பிறப் பொன்றினை மட்டுமே கெடுக்கும். அவன் நாணமின்றி இருப்பானானால், அது அன் நலம்-நன்மைகள்-யாவற்றையும் கெடுக்கும்.

10. நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை

ாானால் உயிர்மருட்டியற்று. . 1020 ப-ரை அகத்து மனத்தின்கண், நாண் இல்லார் . நாணம் இல்லாதவர்கள்: இயக்கம் . உயிருள்ளவர்கள் போல வாழ்கின்ற வாழ்க்கை, மரப்பாவை . மரத்தினால் செய்யப்பட்ட பாவையானது, நானால் இயந்திரக் கயிற்றின் ஆட்டத்தினால், உயிர் மருட்டியற்று -

உயிருள்ளது போல மயக்கியது போன்றதாகும்.

|க.ரை மனத்தில் நாணமில்லாதவர்கள் உயிருடை யார் போன்று வாழ்ந்து வருவது, மரத்தால் செய்யப்பட்ட மரப்பாவை இயந்திரக் கயிற்றினால் உயிருடையது போல இயங்கிக் கொண்டு இருத்தல் போன்றதாகும்.