பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

(ஆதலால்) பருவம் இல்லை - காலக் கட்டுப்பாடு இல்லை என்பதாம்.

(கரை) தம் குடிமக்களை உயரச் செய்வார் காலத்தி னைக் கருதிக் கொண்டு மானத்தைப் பற்றியும் நினைத்துக் கொண்டு இருப்பாரானால் குடி கெட்டுவிடும். ஆதலால் அவர்களுக்குக் காலக் க ட் டு ப் பா டு ம், மானத்தினை நினைத்துக் கொண்டிருப்பதும் இல்லையாகும்.

9. இடும்பைக்கே கொள்கலங்கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு. 1029

|ப-ரை) குடும்பத்தை - தனது குடிமக்களை, குற்றம் . துன்பம் வராமல், மறைப்பான் . காப்பாற்ற முயற்சிப் பவனது, உடம்பு - உடம்பானது, இடும் பைக்கே - துன்பத் திற்கே, கொள்கலம் கொல்லோ கொண்டிருக்கும் இட கமாகுமோ?

(க-ரை) தன் குடி மக்களுக்குத் துன்பம் வராமல் குற்றத்தினை மறைக்க முயற்சிப்பவனுடைய உடம்பு

துன்பத்திற்கே இடமாக இருக்குமோ? இன்பத்திற்கு ஆதல் இல்லையோ?

10. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துமான்றும்

கல்லாள் இலாத குடி. 1030

(ப-ரை) அடுத்து - தாங்குவதைக் கொடுத்து, ஊன் றும் . தாங்குவதற்குவல்ல, நல் - நல்ல, ஆள் - ஆண்மகன், இாைதகுடி . பிறக்காத குடி, இடுக்கண் - துன்பமாகிய ஒன்று, கால் - அடிப்படையான முதலினை (மரம்), கொன்றிட - வெட்டிச் சாய்க்கின்ற போது, விழும் . வீழ்ந்துவிடும்.

(க-ரை) துன்பம் உற்றபோது தக்க காலத்தில் பற்றுக் கோடு கொடுத்துத் தாங்கவல்ல ஆண்மகன் பிறவாத குடி யாகிய மரம், துன்பமாகிய கோடரி வெட்டிச் சாய்க்க

வற்றின்றி விழுந்துவிடும்.