பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. உழவு உழவுத் தொழிலின் சிறப்பு

1. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை. 103 ||

(ப-ரை) சுழன்றும் . பிற தொழில் களைச் செய்து திரிந்தும், ஏர் , ஏரின்(உழவர்), பின்னது வழியில் நிற்பது, உலகம் - உலகமானது, அதனால் . ஆகையினால், உழந்தும் . எல்லா வருத்தம் அடைந்தும், உழவே தலை . உழவே முதன்மையான தொழில் ஆகும்.

(கரை) பிற தொழில்களைச் செய்து திரிந்தும் முடிவில் ஏருடையார் வழியாயிற்று இந்த உலகம். ஆதலால் எல்லாரும் வருத்தமுற்றாலும் தலைமையான தொழில் உழவேயாகும். -

2. உழுவார் உலகத்தார்க்கு ஆணி.அ.து ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து. 1032.

(ப-ரை) அஃது - அந்த உழவுத் தொழிலினை, ஆற்றாது செய்யாமல், எழுவாரை - பிறதொழில்களை மேற்கொண்டுள்ள, எல்லாம் . எல்லோரையும், பொறுத்துதாங்கிக் கொண்டிருப்பதால், உழுவார் . உழவர்கள், உலகத்தார்க்கு . உலக மக்களாகிய தேருக்கு, ஆணி - அச்சாணி எனப்படுவார்கள். -

(க-ரை). உழவுத் தொழிலினை மேற்கொள்ளாமல் பிற தொழில்களை மேற்கொண்டுள்ள எல்லோரையும் தாங்கிக் கொண்டிருப்பதால், உழவர்கள் உலக மக்களாகிய, தேருக்கு அச்சாணி எனப்படுவார்கள். -