பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

441

நல்லாள் - நல்ல பெண்ணானவள், நகும் . தனக்குள்ளே சிரிப்பாள்.

fக-ரை ஒன்றுமில்லாத வறியரானோம் என்று சொல்லிக்கொண்டு சோ ம் ய ல ள க இருப்பவர்களைக் கண்டால், நிலமடந்தை என்று சொல்லப்படுகின்ற நல்ல பெண்ணானவள் தனக்குள்ளே சிரிப்பாள்.

105. நல்குரவு (அனுபவிக்கப்படுவன எதுவும் இல்லாமை)

1. இன்மையின் இன்னாதது யாது.எனின் இன்மையின்

இன்மையே இன்னா தது. 104?

இன்மையின் வறுமையினைப் போல, இன்னாதது - துன்பத்தினைத் தருவது, யாது . எது, எனின் - என்று வினவின், இன்மையின் . வறுமையினைப் போல, இன்னாதது . துன்பத்தினைத் தருவது, இன்மையே - வறுமையேயாகும்.

கே-ரை ஒருவனுக்கு வறுமையினைப் போல் துன்பம் தருவது யாது என்று வினவினால், வறுமைபோலத் துன்பம் தருவது வறுமையேயாகும். பிறிது யாதும் இல்லை. srøArøvrruh.

2. இன்மை எனஒரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும். 1042.

(ப-ரை) இன்மை - வறுமை, என - எனப்படுகின்ற, ஒருபாவி - ஒரு பாவியானாவன், மறுமையும் . மறுமை இன்பமும், இம்மையும் . இம்மை இன்பமும், இன்றிவரும் . அவனுக்கு இல்லையாகும்படி வருவான்.