பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

8. ஏரினும் கன்றால் எரு இடுதல் கட்டபின்

நீரினும் கன்று.அதன் காப்பு. 1038,

(ப-ரை) ஏரினும் - உழுதலைவிட, எரு . எருவினை, இடுதல் . போடுதல், நன்று - நல்லதாகும், கட்டபின் . களை எடுத்தபின், அதன் . அப்பயிரினை, காப்பு . காப் பாற்றுதல், நீரினும் - நீர்ப்பாய்ச்சுவதைவிட, நன்று . நல்லதாகும்.

|க-ரை) பயிர்க்கு உழுதலைவிட எருப்போடுதல் நல்ல தாகும்; களை எடுத்த பிறகு அப்பயிரினைக் காப்பாற்றுதல் நீர்ப்பாய்ச்சுதலைவிட நல்லதாகும்.

9. செல்லான் கிழவன் இருப்பின் கிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும். 1039.'

(ப-ரை) கிழவன் - நிலத்திற்கு உரியவன், செல்லான் இருப்பின் - நாள் தோறும் சென்று நேரில் பார்க்காமலும், தக்கவை செய்யாமலும் சோம்பலாக இருந்துவிட்டால், நிலம் . அவனுடைய நிலம், இல்லாளின் மனைவியைப் போல, புலந்து தன்னுள்ளே சினந்துவெறுத்து, வாடிவிடும். அவனுடன் பிணங்கிக் கொள்ளும்.

(க-ரை நிலத்திற்கு உரியவன் நாள்தோறும் சென்று நிலத்தினைப் பார்த்துத் தக்கவை செய்யாதிருப்பானா னால், அந்தநிலம் தமது மனைவியைப்போலத் தன்னுள்ளே வெறுத்து அவனுடன் பிணங்கிவிடும்.

10. இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்

கிலம் என்னும் கல்லாள் கும். 1040.

(ப-ரை) இலம் - ஒன்றுமில்லாமல் வறியவரானோம், என்று - என்று சொல்லிக் கொண்டு, அசைஇ .சோம்பலாக, இருப்பாரை இருப்பவர்களை, காணின் பார்த்தால், நிலம் - நிலமடந்தை, என்னும் . என்று சொல்லப்படுகின்ற,