பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439

அ வர் விரும்பியதொன்றினை, கரவாதுஈவt-மறைக்காமல்

தருவார்கள்.

(கரை) தம் கையால் உழுது உண்ணுதலை இயல் பாக உடையவர்கள் பிறரிடம் போய் யாசிக்க மாட்டார் கள். தம்மிடம் வந்து யாசிப்போர்க்கு வேண்டியதை மறைக்காமல் கொடுப்பார்கள் .

6. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவது உம்

விட்டேம் என்பார்க்கு கிலை. 1036 (ப-ரை). உழவினார் - உழுதலை உடையார், கை - கையானது, மடங்கின் - உழவினைச் செய்யாமல் மடங்கு மானால், விழைவதாஉம் - மக்கள் விரும்பும் உணவையும், விட்டோம் . துறந்து விட்டோம், என்பார்க்கு - என்பவர் களுக்கு, நிலை - தம் நிலையில் நிற்றலும், இல்லை : இல்லாமற் போகும்.

(கரை) உழவர்களின் கை உழுதல் தொழிலைச் செய்யாது மடங்குமானால் யாவரும் விரும்பும் உணவை யும் (யாம் துறந்தோம்) என்பார்க்கு அவ்வறத்திலேயே நிற்றலும் உளவாகாதாம்.

7. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும். 1037

ப-ரை தொடிப் புழுதி அளவில் ஒரு பலப்புழுதி, கஃசா . காற்பலம் ஆகுமாறு: உனக்கின் - உழுது காய விடுவானானால், பிடித்து - ஒருபிடி அளவாகிய, எரு - எருவும், வேண்டாது - போட வேண்டியதன்றி, சாலப் படும் . பயிர் தழைத்து வளரும்.

(கரை உழுபவன் நிலத்தின் ஒரு புலப் புழுதி காற்பலம் ஆகுமாறு அதனை உழுது காய விடுவானாகில் அந்நிலத்தில் விளையும் பயிர் ஒரு பிடி எருவும் இடவேண் டாமல் தழைத்து விளையும்.