பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

செய்த, நிரப்பு வறுமை, இன்றும் வருவது கொல்லோ. இன்றைய தினமும் என்னிடம் வருவதாகுமோ?

(க-ரை) நேற்றும் கொன்றதைப் போன்று துன்பத். தினைச் செய்த நல்குரவு இன்றும் என்பால் வருகின்றதோ: வந்தால் யாது செய்வேன்.

9. கெருப்பினுள் துஞ்சலும் ஆகும் கிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது. 1049.

(ப-ரை) நெருப்பினுள் - நெருப்பின் மேல் படுத்து, துஞ்சலும் துரங்குதலும், ஆகும் - மருந்து வகைகளினால் முடியக் கூடும், நிரப்பினுள் - வறுமை வந்து ற்ற போது, யாதொன்றும் எந்த வகையிலும், கண்பாடு அரிது . துரங்குதல் முடியாததாகும்.

(கரை) ஒருவனுக்கு நெருப்பின் மேல் படுத்துத் தூங்கு தலும் முடியும்; வறுமை வந்துவிட்டபோது யாதொன்றி னாலும் துரங்குதல் முடியாததாகும்.

10. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 1050.

(ப. ரை) துப்புரவு அனுபவிக்கப்படும் பொருள்கள், இல்லார் . இல்லாதவர்கள், துவர முழுதுமாக, துறவாமை. துறந்து விடாதிருத்தல், உப்பிற்கும் பிறர் வீட்டிலுள்ள உப்பிற்கும், காடிக்கும் - புளித்த அஞ்சிக்கும், கூற்று கூற்று. வனாவான்.

நுகரப்படும் பொருள்கள் எதுவும் இல்லாதவர்கள்

செய்ய வேண்டியது முற்றத் துறத்தலேயாகும். அவ்வாறு

செய்யாதிருத்தல், பிறர் வீட்டிலிருக்கும் உப்பிற்கும். காடிக்கும் கற்றுவனாக முடியும்,