பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

(கரை) இரத்தல் என்னும் பாதுகாப்பில்லாத தோவி மறைத்தல் என்னும் வன்னிலத்தில் தாக்குமாயின் பிளந்து போகும்.

9. இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள

உள்ளது உம் இன்றிக் கெடும். 1069

(ப.ரை இரவு - இரந்து கேட்கின்ற கொடுமையினை, உள்ள நினைக்கும் போது, உள்ளம் உருகும் - மனம் கரைந்து உருகுகின்றது, கரவு-மறைத்துவைத்து இல்லை,என்பதனை, உள்ள நினைக்க, உள்ளது உம் - உருகுகின்ற அந்த அளவும், இன்றிக் கெடும்-இல்லாமல் அழிந்து போவதாகும்.

|க-ரை உடையவர்களின் முன் வறியவர்கள் நின்று யாசிக்கும் கொடுமையினை நினைத்தால், உள்ளம் கரைந்து உருகுகின்றது, உடையவர் இல்லையென்னும் கொடுமை யினை நினைத்தால், உருகிய அளவும் இல்லாமல் அழிந்து விடும்.

10. கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். 1070

(ப-ரை) சொல்லாட இரப்பவர்க்கு இல்லையென்று சொல்லியவுடனே, இரப்பர் - யாசிப்பவருக்கு, உயிர்போ ஒம்.உயிரானது போகின்றது.(அவ்வாறாயின்)கரப்பவரிக்கு. மறைத்து வைத்து இல்லையென்பார்க்கு உயிர்பின்னும் இருத்தலால், யாங்கு . அவர் உயிர் எங்கு புகுந்து, ஒளிக்கும் கொல்லோ மறைந்திருக்குமோ?

(கரை) உள்ளதை மறைத்து வைத்து இல்லையென்ற போதே இரப்பார்க்கு உயிர் போகும் நிலையாகின்றது. இனி உள்ளதை மறைத்து இல்லை என்பவர்க்கு உயிர் போகா திருத்தலால், அது எங்கு சென்று மறைந்திருக்குமோ?