பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-45%

8. ஆவிற்கு நீர் என்று இரப்பினும் காவிற்கு

இரவின் இளிவந்தது இல், 1066.

|ப-ரை) ஆவிற்கு - பசுவுக்கு, நீர் - தாகம் நீக்க நீர் வேண்டும், என்று - என்று கேட்டு, இரப்பினும் . யாசித்துக் கேட்கும் போதும், இரவின் அவ்வாறு இரத்தவினைப் போல, நாவிற்கு . நாவினுக்கு, இளி - இழிவு, வந்ததுஇல் - தருவது வேறு எதுவும் இல்லை.

|க-ரை) தண்ணிரின்றித் தவிக்கும் பசுவிற்குத் தண்ணீர் தரல் வேண்டும் என்று இரந்து கேட்கும் போதும், இவ்வாறு யாசிப்பதுபோல ஒருவன் நாவிற்கு இழிவினைத் தருவது வேறில்லையாம்.

7. இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற்

கரப்பார் இரவள்மின் என்று. 1067

|ப-ரை. இாப்பின் - யாசிக்க வேண்டுமானால், கரப்பார் . வைத்திருப்பதை மறைப்பவரிடம், இரவன் மின் என்று . இரவாதிருப்பீர்களாக என்று, இரப்பாரை - யாசிப்பவர்கள்,எல்லாம் - எல்லோரிடமும் இரந்து கேட்டுக் கொள்வேன்.

(க-ரை) நீங்கள் யாசிக்க வேண்டுமென்றால், உள்ளது மறைப்பவர்களிடம் யாசிக்காதிருங்கள்' என்று சொல்வி யாசிப்பவர்களிடமெல்லாம் யான் சென்று யாசிப்பேன்.

8. இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவுஎன்னும்

பார்தாக்கப் பக்கு விடும். 1068

|வரை) இரவு - யாசித்தல், என்னும் - எனப்படும், ஏமாப்பு-பாதுகாப்பு, இல் - இல்லாத, தோணி - மரக்கலம், அரவு - மறைத்தல், என்னும் - எனப்படும், பார்தாக்க . வன்னிலத்துடன் தாக்கி விடுமானால், பக்குவிடும் - பிளந்து போவதாகும்.