பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

இரந்து - யாசித்தே, திர்வாம் - நீக்குவோம், என்னும் . என்று எண்ணும், வன்மையின் முரட்டுத் தன் மையைப் போன்ற, வன்பாட்டது - வலிமையினையு டையது, இல் - வேறு எதுவும் இல்லை.

(க.ரை வறுமையால் வரும் துன்பத்தினை முயற்சி யால் நீக்கக் கருதாமல், யாசித்தே நீக்குவோம் என்று நினைக்கும் முரட்டுத் தன்மை போல, வன்மையுடையது பிறிதொன்றும் இல்லை.

4. இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்

காலும் இரவுஒல்லாச் சால்பு. \06ፋ

(ப.ரை) இடம் - அனுபவிக்க வேண்டிய வை, இல்லாக் காலும் . இல்லாமல் வறுமைப்பட்ட காலத்திலும், இரவு - யாசிப்பதனை,ஒல்லா - மேற் கொள்ளாத, சால்பு - நிறை குணம்,இடமெல்லாம்.உலகமெல்லாம் ஒன்று சேர்ந்தாலும், கொள்ளா. கொள்ளாத, தகைத்தே சிறப்பினையுடைய தாகும்.

|க.ரை நுகரவேண்டுவன இல்லாமல் வறுமையுற்ற போதும் பிறரிடம் சென்று இரத்தலுக்கு உடன்படாத பெருந்தன்மை, எல்லா உலகும் ஒருங்கு சேர்ந்தாலும் கொள்ளாத, பெருமை உடைத்தி.

5. தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள் தந்தது

உண்ணலின் ஊங்கு இனியது இல். 1065

ப.ரை தாள் - தனது முயற்சியானது. தித்தது : கொண்டு வந்து கொடுத்தது,தெள்-தெளிந்த, நீர்.நீரினைப் போன்ற,அடுபுற்கை-சமைத்த கூமுே. ஆயினும். ஆனாலும், உண்ணலின் ஊங்கு - அதனை உண்பதைவிட, இனியது.இல்இனியதாக இருப்பது வேறு எதுவும் இல்லை.

(கரை முயற்சி கொண்டுவந்து தந்தது தெளிந்த நீர் போன்ற கூழேயாயினும் அதனை உண்பதைவிட இன்பம் தருவது வேறு எதுவும் இல்லை.